தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பற்றி மாரி செல்வராஜ் விமர்சனம்

தனுஷ் இயக்கிய படம் குறித்து, இயக்குனர் மாரி செல்வராஜ் கூறிய விமர்சனம் பார்ப்போம்..
தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. காதல் மற்றும் காதல் தோல்வியின் உணர்ச்சிகளுக்கு நடுவே போராடும் விதமாகவும், அதனை எதார்த்தமான நகைச்சுவையோடு டீசர் சொல்கிறது.
தனது 50-ஆவது படத்தை இயக்கி நடித்த தனுஷ், அடுத்ததாக தன் சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம், வரும் 21-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
படத்தில் பவிஷுக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடிக்க, பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், சதீஷ், வெங்கடேஷ், ரம்யா ரங்கநாதன், உள்பட பலர் நடித்துள்ளனர்.
பிரியங்கா மோகன், ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடலுக்கு ஸ்பெஷல் அப்பியரன்ஸாக வந்து ஆட்டம் போட்டுள்ளார். தனுஷும் ‘காதல் ஃபெயில்’ என்கிற பாடலில் ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுத்துள்ளார்.
டீன் ஏஜ் பருவ மாணவர்களின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை, கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தின் முதல் விமர்சனமாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவிக்கையில், ‘நீண்ட நாட்களுக்கு பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் வழக்கமான ஒரு காதல் கதையை கண்டு ரசித்தேன்.
ஆனாலும், தனுஷ் உருவாக்கியுள்ள உலகத்தின் ஒவ்வொரு விஷயங்களையும் கண்டு உற்சாகமடைந்தேன். இதைக் காணும் அனைவருக்குமே இந்த உற்சாகம் ஏற்படும். வாழ்க்கையின் உச்சபட்ச மகிழ்ச்சியே காதலின் அப்பாவித்தனத்தில் நிகழ்வது தான்’ என தெரிவித்துள்ளார். ஆம், அறியாமை தானே காதலில் இன்பம்.!

