Web Ad 2

ரம்யா பாண்டியன் பகிர்ந்த சந்தோஷமான தகவல், குவியும் வாழ்த்து..!

Web Ads

ரம்யா பாண்டியன் சந்தோஷமான தகவல் ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

Happy information shared by Ramya Pandyan
Happy information shared by Ramya Pandyan

தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சமீபத்தில் அவருக்கு கோலாகலமாக கங்கை நதிக்கரையோரம் திருமணம் நடந்திருந்தது. தொடர்ந்து கணவருடன் சேர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது ரம்யா பாண்டியனின் சகோதரரான பரசுப் பாண்டியனுக்கு தற்போது பந்தகால் வைத்து நலங்கு வைத்துள்ளனர். இந்த புகைப்படத்தை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ரம்யா பாண்டியனுக்கும் அவரது சகோதரருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.