தெலுங்கு கற்றுக்கொண்டு என்ன செய்ய போகிறேன்: நடிகர் ஜீவா ஸ்பீச்

‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்ற வாசகம் யாராலும் மறுக்க முடியாதது. இதில், நடிகர் ஜீவா எடுத்த முடிவு சரிதானா? விஷயத்திற்கு வருவோம்..
அதாவது, ‘ஆசை ஆசையாய்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, தித்திக்குதே, ராம், டிஸ்யூம், கோ, நண்பன், என்றென்றும் புன்னகை, பிளாக் என பல படங்களில் தனது மாறுபட்ட நடிப்பினால், தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஜீவா.
இதில், ராம், கோ, நண்பன், நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட ஒரு சில ஹிட் படங்களில் நடித்திருந்தார். ஆனால், பெரியளவில் தாக்கம் இல்லை. தெலுங்கில் யாத்ரா 2 படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தின் ஆஃபர் குறித்து, ஜீவா தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதில்,
‘என்னுடைய அம்மாவும், அப்பாவும் (ஆர்.பி. சௌத்ரி) தமிழ் தவிர மற்றொரு மொழியையும் கற்றுக் கொள்ள சொன்னார்கள். அதுவும், தெலுங்கு கற்றுக்கொள் என்றார்கள். ஆனால், தெலுங்கு கற்றுக் கொண்டு என்ன செய்ய போகிறேன்.
தமிழில் தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். இனிமேலும் தமிழில் தான் நடிப்பேன். என்னுடைய உணர்வுகளை தமிழில் தான் என்னால் தெளிவாக சொல்ல முடியும். தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என்றேன்.
அப்போதுதான் ‘யாத்ரா 2’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அது எனக்கு பயத்தை கொடுத்து விட்டது. ஆனால், படத்தில் சண்டையும் இல்ல, டான்ஸ், சாங்ஸ் என எதுவும் கிடையாது. தெலுங்கு மட்டும் கற்றுக் கொண்டால் போதும் என்று இருந்தது. அதன் பிறகு தான் ‘யாத்ரா 2′ படத்தில் நடித்தேன்’ என்று கூறியிருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு தவிர ஹிந்தி மற்றும் மலையாளத்திலும் ஒரு சில படங்களில் ஜீவா நடித்துள்ளார். மேலும், தற்போது ‘அகத்தியா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில், யுவன் இசையமைக்க, ஜீவா, அர்ஜூன், ராஷி கண்ணா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராதா ரவி, விடிவி.கணேஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 2025 ஜனவரி 31-ம் தேதி திரைக்கு வர இருப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
