கீர்த்தி சுரேஷின் செல் நம்பரை கேட்ட பிரபல நடிகர்கள்; வருண் தவான் மறுப்பு

Web Ads

‘பேபி ஜான்’ பட ஹீரோ வருணிடம் நடிகை கீர்த்தி சுரேஷின் செல் நம்பரை, கேட்ட நடிகர்கள் பற்றி பார்ப்போம்..

தளபதி விஜய், சமந்தா நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தை இந்தியில் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் அட்லி தயாரிக்க, காளீஸ் இயக்கி படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ரிலீஸாகி தற்போது நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ‘பேபி ஜான்’ பட ரிலீஸுக்கு முன்பு கீர்த்தி சுரேஷுக்கும், அவரின் 15 ஆண்டு கால காதலரான ஆண்டனி தட்டிலுக்கும் டிசம்பர் 12-ம் தேதி கோவாவில் திருமணம் நடந்தது. ஆண்டனியை காதலித்ததை, கீர்த்தி யாருக்கும் சொல்லாமல் இத்தனை ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்தார். இச்சூழலில், கீர்த்தி சுரேஷ் பற்றி வருண் தவான் கூறியிருப்பதாவது,

‘மும்பையில் ‘பேபி ஜான்’ படப்பிடிப்பு நடந்தபோது நிறைய பேர் அதிலும் குறிப்பாக நிறைய ஹீரோக்கள் எனக்கு மெசேஜ் செய்து கீர்த்தி சுரேஷின் செல்போன் நம்பரை கேட்டார்கள். என்னால் கொடுக்க முடியாது என தெரிவித்தேன். கீர்த்தியை பத்திரமாக பார்த்துக் கொள்வது என் பொறுப்பு.  அதனால், நான் யாருக்கும் நம்பரை கொடுக்கவில்லை’ என்றார்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷை ‘டேட்’ செய்ய வருண் தவானிடம் நம்பர் கேட்ட ஹீரோக்கள் யார், யார் என தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது மாறி மாறிக் கேட்பது வைரலாய் பரவுகிறது.

varun dhawan interesting information about keerthy suresh