முதல் நாள் வசூலில், ‘தெறி’ படத்தை விட ‘பேபி ஜான்’ திரைப்படம் பின்னடைவு

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய ‘தெறி’ படத்தை விட, ‘பேபி ஜான்’ படம் கலெக்ஷனில் பின்னடைந்த தகவல் பார்ப்போம்..
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், விஜய் நடித்து, அட்லி இயக்கிய ‘தெறி’ திரைப்படம் ரூ.75 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இப்படத்தில் ராதிகா, மகேந்திரன், பிரபு, மனோபாலா உள்பட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
தற்போது இந்த படத்தின் ரீமேக், ஹிந்தியில் அட்லி தயாரிப்பில், காளீஸ் இயக்கத்தில் உருவாகி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.
இப்படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்க, கீர்த்தி சுரேஷ்கதாநாயகியாக நடித்திருந்தார். தமன் இசையமைத்திருந்தார்.
‘தெறி’ படத்தை விட இரண்டு மடங்கு பட்ஜெட்டில் உருவான ‘பேபி ஜான்’ திரைப்படம் வெளியான நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி ‘தெறி ‘ திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 18.1 கோடி வசூலும், உலக அளவில் 39.96 கோடி வசூலும் செய்தது. ஆனால் ‘பேபி’ ஜான் திரைப்படம் நேற்று ஒரே நாளில், உலக அளவில் 12.50 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், தளபதி விஜய்யை முந்த முடியாமல் ‘பேபி ஜான்’ திரைப்படம் வசூலில் பின் தங்கியுள்ளது.
