நாளை, சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளில் செம அப்டேட்ஸ் வெளியாகிறது; ரசிகர்கள் குஷி..

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளான நாளை, ரசிகர்களுக்காக மாஸ் அப்டேட் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்துப் பார்ப்போம்..

ரஜினிகாந்த் நடிப்பில், தற்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய இரண்டு படங்கள் தயாராகி வருகிறது. இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில், கூலி படத்தை லோகேஷ் கனகராஜும், ஜெயிலர் 2 படத்தை நெல்சனும் இயக்குகிறார்கள். இந்த இரண்டு படங்களின் புரோமோவும் ரஜினிகாந்த் பிறந்த நாளான நாளை 12-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, ரஜினி பிறந்த நாள் என்றாலே அவர் நடித்த பழைய படங்கள் ரீ-ரிலீஸ் ஆவதுண்டு, கடந்த ஆண்டு அவரின் பாபா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டு ரஜினிகாந்தின் பிறந்த நாள் அன்று, அவர் நடிப்பில் வெளியாகி வசூல் வேட்டையாடிய ‘தளபதி’ படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

‘தளபதி’ படத்துக்கு பிறகு, ரஜினிகாந்தும் மணிரத்னமும் இணைந்து பணியாற்றாமலே இருந்து வந்தனர். இந்நிலையில், இந்த கூட்டணியில் தற்போது 33 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் இணைய உள்ளதாக அண்மையில் தகவல் கசிந்தது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளான நாளை சர்ப்ரைஸாக வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செம மாஸான இந்த அப்டேட்டையும் ரஜினி ரசிகர்களும் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.

இயக்குனர் மணிரத்னம் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ‘தக் லைஃப்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். ‘தக் லைஃப்’ திரைப்படம் வருகிற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. அப்படம் ரிலீஸான பின்னர் ரஜினி பட பணிகளை தொடங்க இருக்கிறார் மணிரத்னம்’ என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

‘சோகம் விட்டு, சொர்க்கம் தொட்டு பாட்டும் பாடும் வானம்பாடியாய்’ விரைந்து தெறிக்கட்டும் தலைவர் படம்.!

special update on the way for rajinikanth birthday
special update on the way for rajinikanth birthday