தளபதி விஜய்யின் அரசியல் வருகை குறித்து, நடிகை பாவனா சொன்ன கருத்து
தளபதி விஜய்யின் அரசியல் வருகை குறித்து, நடிகை பாவனா கருத்து தெரிவித்துள்ளார். அது என்ன? என காண்போம்..
மண்ணில் நடமாடும் வெள்ளை நிலா போல கொள்ளை அழகு தான் நடிகை பாவனா. சில காரணங்களால் சினியிலிருந்து ஒதுங்கியிருந்த இவர், தற்போது மீண்டும் திரையில் உலா வர இருக்கிறார்.
இந்நிலையில், 10 ஆயிரம் சிசிடிவிக்களை சென்னையில் பல்வேறு இடங்களில் நிறுவும் நிகழ்ச்சிக்காக, சிறப்பு விருந்தினராய் கலந்து கொண்டு மனம் விட்டு பேசினார்.
‘சிசிடிவி கேமிராவும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் பயனுள்ளதாக அமைகிறது.
முன்னதாக, புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார். அதனால், அவர் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் காத்திருக்கின்றன. அவருடன் ‘ உத்தரகாண்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். தமிழில், இப்போதைக்கு ஏதும் நடிக்கவில்லை’ என்றார்.
விஜய் அரசியல் குறித்து சில பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, ‘அது அவரோட முடிவு. அதில், நான் என்ன கருத்து சொல்வது’ என கேள்வியெழுப்பிய பாவனா, ‘நல்லது செய்வதற்காக அரசியலுக்கு வரும் அவருக்கு ஆல் தி பெஸ்ட் என்று வேண்டுமானால் சொல்கிறேன்’ என புன்னகைத்துச் சென்றார் பாவனா.!
அப்றமென்ன, தளபதியின் தவெகவுக்கு கேரளாவுலேயும் ஆதரவு கிட்டிருச்சு.!