பிரம்மாண்டமாக உருவாகும் ‘சிம்பு-50’: போட்டியாக களம் இறங்குகிறது தனுஷின் படம்?

‘சிம்பு-50’-வது படத்துக்கு போட்டியாக, தனுஷின் படமும் களத்தில் இறங்குகிறதா? இது குறித்த தகவல்கள் பார்ப்போம்..
சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘சிம்பு 48’ படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால், அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவேயில்லை.
இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிம்பு, தக் லைஃப் படத்தில் நடிக்க சென்று அந்த படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. இதனால், சிம்புவின் 48-வது படமாக தக் லைஃப் அமைந்துள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் ஆகிறது.
இதற்கிடையில், சிம்பு அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால், சிம்புவும் தேசிங்கும் இணையும் படம் அவரின் 50-வது படமாக இருக்கும் என சொல்லப்பட்டது.
இந்நிலையில், சிம்பு & தேசிங்கு இணையும் படத்தை துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவர் தயாரிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அது அடுத்தகட்டத்துக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
நிலைமை இப்படியிருக்க, சிம்பு தற்போது தன்னுடைய 50-வது படத்தைத் தானே இயக்க முடிவு செய்துள்ளார். முன்னதாக, மன்மதன், வல்லவன் போன்ற படங்களை இயக்கி வெற்றி பெற்றார்.
தற்போது இயக்கவிருக்கும் தனது 50-வது படத்தை, மிகப் பிரம்மாண்டமாக எடுத்து, பான் இந்தியாவாக கொண்டு செல்ல சிம்பு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு, அதன் பிறகு தேசிங்கு இயக்கும் படத்தில் நடிப்பார் எனவும்
கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், சிம்பு இயக்கும் 50-வது படத்துக்கு போட்டியாக, தனுஷ் நடித்து இயக்கும் படமும் களத்தில் இறங்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.!
