Pushpa 2

சினிமா பிரபலங்கள் அனைவருக்கும் ‘ரோல் மாடலான’ ஓர் நிகழ்வு: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..

‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்ற வாசகத்திற்கேற்ப நடிகர் சிவகார்த்திகேயனின் வாழ்வியல் அமைந்திருக்கிறது. ஆம், அவரே குறிப்பிடுகிறார் இது குறித்து..

அதாவது, சிவகார்த்தி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே மாதிரியான படங்களிலும் ரோல்களிலும் நடிக்கின்றார் என விமர்சனங்கள் எழுந்தன.

அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து, பதிலடி கொடுத்து வருகின்றார். குறிப்பாக, அமரன் திரைப்படத்தில் அவரின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை எனலாம். முன்பு, அவரை விமர்சனம் செய்த சிலரும் அமரன் படத்தில் அவரின் நடிப்பை பார்த்து பாராட்டினார்கள்.

இந்நிலையில், எவ்வித சினிமா பின்புலமும் இல்லாமல், தமிழ் சினிமாவில் இன்று வெற்றிகரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், தன் மனைவியால் தான் சினிமாவில் இருந்து விலகாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

‘சினிமா துறையில் எங்கிருந்து யார் அம்பை விட்டு தாக்குவார்கள் என தெரியாது. எங்கிருந்து பிரச்சினை வருகின்றது என்பதே தெரியாது.

ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு போகலாம் என்ற எண்ணம் வந்தபோது, அதை என் மனைவியிடம் நான் கூறினேன். அவர் தான் சினிமாவை விட்டு போகக்கூடாது என சொன்னார். நான் இன்று சினிமாவை விட்டு விலகாமல் இருக்க, என் மனைவி ஆர்த்தி தான் காரணம்.

அவரின் சப்போர்ட் தான் என்னை சினிமாவில் நிலைத்து நிற்க செய்கின்றது என மிகவும் நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் கடந்த மாதம் அமரன் கெட்டப்பில் அவரின் மனைவி ஆர்த்தியை சர்ப்ரைஸ் செய்த வீடியோ இணையத்தில் செம வைரலானது.

தென்னிந்திய திரையுலகில் ஒரு நடிகர் பதிவிட்ட வீடியோவிற்கு இந்தளவிற்கு பார்வையாளர்கள் கிடைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது.

சுமார் நூறு மில்லியன் பார்வையாளர்களை அந்த வீடியோ பெற்று மிகப்பெரிய சாதனையை படைத்தது. மேலும் அந்த வீடியோவை பார்த்த அனைவரும் சிவகார்த்திகேயன் மற்றும் அவரின் மனைவி ஆர்த்தியை மனதார வாழ்த்தினார்கள்.

சினிமா பிரபலங்கள் அனைவருக்கும் இந்நிகழ்வு ரோல் மாடலாக அமைந்து படிப்பினையாகவும் அமைந்திருக்கிறது எனலாம்.