இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 6 திரைப்படங்கள்.. உங்களுடைய ஃபேவரிட் திரைப்படம் எது?
இந்த வாரம் ஓடிடியில் ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் வெளியாகும் படத்துக்கு ரசிகர்கள் எவ்வளவு வரவேற்பை கொடுத்து வருகிறார்களோ அதே அளவு ஓடிடியில் வரவேற்பை கொடுத்து வருகின்றனர். ஒரு சில படங்கள் நேரடியாகவும் ஓடிடியில் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஆறு திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
நயன்தாரா, மீரா ஜாஸ்மின், சித்தார்த் ,மாதவன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள டெஸ்ட் திரைப்படம் இன்று netflix தளத்தில் வெளியாக உள்ளது.
ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் ஜென்டில்வுமன் என்ற திரைப்படம் டென்ட்கொட்டா ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யா பாரதி இணைந்து நடித்துள்ள கிங்ஸ்டன் திரைப்படம் ஜி 5 ஓடிடியில் இன்று வெளியாக உள்ளது.
யோகி பாபு நடிப்பில் முற்றிலும் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் லெக் பீஸ் திரைப்படம் டென்ட் கொட்டா ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.
ஹேமந்த் நாராயணன் இயக்கத்தில் வெளியான மர்மர் என்று திரைப்படம் இன்று டென்ட்கொட்டா தளத்தில் வெளியாக உள்ளது.
இயக்குனர் காமராஜ் வேல் இயக்கத்தில் திவ்யா துரைசாமி, அபிராமி,சாக்ஷி அகர்வால் போன்ற பிரபலங்கள் நடித்து வெளியான திரைப்படம் அதர்மக் கதைகள் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
இந்த ஆறு திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது?என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
