Web Ads

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த இட்லி கடை படக்குழு..வைரலாகும் பதிவு.!!

Web Ad 2

புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது.

idly kadai movie new release date update
idly kadai movie new release date update

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ்.பவர் பாண்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் .அதனை தொடர்ந்து ராயன்,நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், போன்ற படங்களை இயக்கியிருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படம் டான் பிக்சர் தயாரிப்பிலும், ஜிவி பிரகாஷ் இசையிலும் உருவாகி வருகிறது. மேலும் ராஜ்கிரண், நித்யா மேனன் ,அருண் விஜய் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த திரைப்படம் வருகிற பத்தாம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் நடிகர்களின் கால்ஷீட் பிரச்சனையால் படப்பிடிப்பு நிறைவடையாமல் இருக்கிறது இதனால் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சொல்லி இருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.