அச்சம் என்பது மடமையடா படத்திற்கு 10 ஆண்டுகள்.. மஞ்சிமா மோகன் நெகிழ்ச்சிப் பதிவு!

Web Ads

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மஞ்சிமா மோகன். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். இப்படம் வெளியாகி தற்போது 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நடிகை மஞ்சிமா மோகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “திரும்பிப் பார்க்கும்போது பல நினைவுகளும், கடந்து வந்த பாதைக்கு நன்றியுணர்வும் மேலோங்குகிறது. இத்தனை ஆண்டுகளில் நீங்கள் எனக்கு அளித்த அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்கள் அன்பும் ஆதரவும் இல்லையென்றால் நான் இந்த இடத்தில் இருந்திருக்க முடியாது.

இனிவரும் காலங்களில் மேலும் பல நல்ல நினைவுகளையும், நிறைய திரைப்படங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வேன் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Web Ad 2

‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நினைவுகூர்ந்து மஞ்சிமா மோகன் பகிர்ந்துள்ள இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ondraga Entertainment (@ondragaent)