தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சீரியலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொலைக்காட்சி நிறுவனமும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி வருகிறது.
சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய சீதா ராமன், அண்ணா உள்ளிட்ட சீரியல்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவற்றை தொடர்ந்து வெகு விரைவில் இதயம் என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த சீரியலில் நாயகியாக நடிக்க சரண்யா துரடி, திவ்யா கணேஷ் போன்ற நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் தற்போது ஜனனி அசோக்குமார் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், மேலும் சீரியல் ஹீரோவாக தெலுங்கு மற்றும் மலையாள சீரியல்களில் நடித்து பிரபலமான ரிச்சர்ட் ஜோஸ் என்ற நடிகர் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த சீரியலின் பூஜை சமீபத்தில் ஷூட்டிங்குடன் தொடங்கியுள்ளது, இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சீரியலின் கதை என்ன? ஒளிபரப்பாகும் நேரம் என்ன?என்பது குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.