என்னை அறிந்தால் திரைப்படம் உலக அளவில் நல்ல வசூலை பெற்று இருந்தாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
Yennai Arindhaal Movie Collection Report : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று என்னை அறிந்தால்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி இருந்த இப்படத்தில் தல அஜித், அருண் விஜய், திரிஷா ஆகியோர் நடித்திருந்தனர்.
ரூபாய் 68 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்த இப்படம் உலகம் முழுவதும் ரூபாய் 107 கோடி வசூல் செய்துள்ளது.
உறுதியானது அஜித்தின் அடுத்த படம்… மூன்றாவது முறையாக இணையும் மெகா கூட்டணி!
தமிழகத்தில் மட்டும் ரூபாய் 57.5 கோடி வசூல் செய்துள்ளது. கேரளாவில் ரூபாய் 6 கோடி வசூல் செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் கர்நாடகாவில் 7.6 கோடி வசூலை பெற்றுள்ளது. ஆந்திர பிரதேஷ் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரூபாய் 4.25 கோடியும் வட இந்தியாவில் ரூபாய் 1.3 கோடியும் வசூல் செய்துள்ளது.
மேலும் வெளிநாடுகள் மூலமாக ரூபாய் 30 கோடி வசூல் செய்துள்ளது. விநியோகிஸ்தர்களுக்கு இப்படம் லாபத்தை கொடுத்திருந்தாலும் தயாரிப்பாளருக்கு ரூபாய் ஒரு கோடி வரை நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.