Thala 61 Director
Thala 61 Director

தல அஜித்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Thala 61 Director : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய எச் வினோத் இயக்குகிறார். இந்த படத்தை தொடர்ந்து அஜித் யாருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வந்தது.

கையில் துப்பாக்கியுடன் யங் லுக்கில் தல – பட்டய கிளப்பும் தல 60 போஸ்டர்!

அதுமட்டுமல்லாமல் அஜித் மீண்டும் கௌதம் மேனன் மற்றும் விஷ்ணுவர்தன் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது அவர்களின் ஆசை நிறைவேற உள்ளது. தல அஜித்தின் அடுத்த படத்தை பில்லா ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆபாச படம் எடுக்கும் நீ இப்படி பேசலாமா? விஜய்யின் தந்தைக்கு எதிராக குவியும் எதிர்ப்புகள்!

மேலும் தல அஜித் விஷ்ணுவர்தனை பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் சென்று கதை கூறுமாறு அனுப்பி வைத்துள்ளார் எனவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

அஜித்தை ஒரு ஸ்டைலிஷான ஹீரோவாக மாற்றிய விஷ்ணுவர்தனுடன் அவர் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.