World Test Champions : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, TNPL 2019, TNPL Match 2019

World Test Champions :

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் ஒன்பது அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கிரிக்கெட் நடப்பில் டெஸ்ட் போட்டிகள் இரு நாடுகளுக்கு இடையில் நடத்தப்பட்டு வந்தது.

இந்த முறையை மாற்றி ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் தொடரை போன்று நடத்த ஐசிசி விரும்பியது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அடித்தளம் கடந்த 2010ல் துவங்கியது. ஐசிசி.,யின் மினி உலகக்கோப்பையாக கருதப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பதிலாக கடந்த 2013ல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்த திட்டமிடப்பட்டது.

India’s Shikhar Dhawan bats during the first day of the third cricket test match between England and India at Trent Bridge in Nottingham, England, Saturday, Aug. 18, 2018. (AP Photo/Rui Vieira)

ஆனால் பின்னர் கைவிடப்பட்டு, ஒருநாள் போட்டியாகவே நடத்தப்பட்டது. தொடர்ந்து 2017ம் ஆண்டில் இத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போதும் நடைமுறை சிக்கல் இருந்ததால், 2019 – 2021ம் ஆண்டில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான வேலைகள் அனைத்தையும் செய்து இன்று அதிகாரப்பூர்வமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர் வெளியூர் அடிப்படையில் விளையாட வேண்டும். இறுதியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியனுக்கான இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

இறுதிப் போட்டி இங்கிலாந்தில் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

விஜயுடன் லிப் லாக்… கேவலமா இல்லயா? நடிகையை விளாசும் நெட்டிசன்கள்.! ( வீடியோ உள்ளே )

இதில் 27 தொடர்கள் 71 போட்டிகள் அடங்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் பங்கேற்கின்றன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் தொடராக இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஆஷஸ் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது.

ஒரு தொடரில் வெற்றி பெற்றால் 60 புள்ளிகள், போட்டி டிராவில் முடிந்தால் 30 புள்ளிகள், முடிவு இல்லை என்றால், 20 புள்ளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல ஒரு தொடரில் அணிகள் 3 டெஸ்ட் போட்டியில் மோதி ஒறு போட்டியில் வென்றால் 40 புள்ளிகள், போட்டி டிராவில் முடிந்தால் 20 புள்ளிகள், முடிவு இல்லை என்றால் 13.3 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.