ரஜினி நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது? கமல்ஹாசன் பதில்..!
ரஜினிகாந்த் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கி உள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ரஜினி நடித்த படங்களில் கமலுக்கு பிடித்த படம் எது என்று சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கேட்டுள்ளனர்.
தளபதி,முள்ளும் மலரும், பாஷா போன்ற மூன்று படங்களின் பெயர்களை சொல்லி இதில் எந்த படப் பிடிக்கும் என்று கேட்க கமல்ஹாசன் முள்ளும் மலரும் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
