உடல் எடையை குறைப்பது எப்படி? விஜய் சேதுபதி விளக்கம்..!

உடல் எடையை குறைப்பது குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி தற்போது இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்ற நிலையில் தற்போது விஜய் சேதுபதி உடல் எடையை குறைப்பது குறித்து சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
அதில் எனக்கு எவ்வளவு எடை இருக்கிறது என்பதைவிட நான் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்பதே முக்கியம். மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தால் அதுவே என் உடல் எடையை குறைக்க போதும் நான் எடை பார்க்கும் மெஷினை பயன்படுத்துவது கிடையாது அதில் காட்டும் எண்கள் என்னை சோர்வடையச் செய்யும் உடல் எடையை விட மனம் மற்றும் உடல் ஆரோக்கியமே முக்கியம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
