ரஜினியின் ‘கூலி’ பட டீசர் நாளை மறுநாள் வெளியீடு?
ரஜினியின் ‘கூலி’ பட டீசர் வெளியீடு எப்போது என பார்ப்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படத்தின் ஷூட் 80 சதவீதம் முடிவடைந்து உள்ளது. குறிப்பாக, ரஜினி போர்ஷன் முடிந்தது.
அனிருத் இசையமைப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர்கான் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள படக்குழு, அப்படத்தின் அப்டேட்டுகளையும் ஒவ்வொன்றாக வெளியிட்ட வண்ணம் உள்ளது. அவ்வகையில், ரஜினியின் பிறந்தநாள் அன்று இப்படத்தின் ‘சிக்கிடி சிக்’ பாடல் புரோமோ வெளியானது. இதையடுத்து, பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், படத்தின் டீசர் வருகிற மார்ச் 14-ந் தேதி இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்த நாள் அன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. பார்க்கலாம்.!