சிம்பு கமிட்டான வடசென்னை கதை என்ன ஆயிற்று?: வெற்றிமாறன் அப்டேட்ஸ்..

‘பொய்கள் காட்டுத்தீயாய் பரவும், உண்மை மெதுவாகவே வெளிப்படும்’ என்பதுபோல ஒரு தகவல் காண்போம்..
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்கவிருக்கும் ‘வாடிவாசல்’ தாமதத்திற்கு சில காரணங்கள் சொல்லப்பட்டது. இருப்பினும், இப்படம் உருவாகும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், வடசென்னையை கதைக்களமாக கொண்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க புதிய படமொன்று முடிவானது. ஆனால், அதன் அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது. இதனால், பலரும் இப்படம் கைவிடப்பட்டது என்று கருதுகிறார்கள். ஆனால், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என வெற்றிமாறன் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘பேட் கேர்ள்’ படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்வில், சிம்பு படம் குறித்து வெற்றிமாறன் தெரிவிக்கையில், ‘விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன’ என தெரிவித்துள்ளார். இதன் மூலம் இப்படம் கைவிடப்படவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
இப்படம், தாணு தயாரிப்பில் உருவாகிறது. ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இதில், கவுரவ கதாபாத்திரத்தில் இயக்குநர் நெல்சன் மற்றும் கவின் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
