பெருசு படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ..!
பெருசு படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் வைபவ். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பெருசு. இந்த படத்தை இளங்கோ ராமநாதன் இயக்கியிருந்தார்.
மேலும் சுனில் ரெட்டி, பாலசரவணன், சாந்தினி, நிஹாரிக்கா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் இந்த திரைப்படம் எடுத்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.
தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படம் வருகிற 11ம் தேதி netflix ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
