அந்தப் படத்தால் என் குடும்பம் மனவேதனை அடைந்தது.. அமலா பால் ஓபன் டாக்!!

அந்தப் படத்தால் என் குடும்பம் மனவேதனை அடைந்தது என்று அமலா பால் ஓபனாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அந்தப் படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆகி இலை என்ற ஒரு ஆண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இவர் நடித்த முதல் படமான சிந்து சமவெளி அவரது 17 வயதில் நடித்துள்ளார். அதில் மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே தவறான உறவு போல் அந்த கதை இருந்தது அனைவரும் அறிந்ததே.
தற்போது அந்த படம் குறித்து சில விஷயங்களை அமலாபால் பகிர்ந்து உள்ளார். அதாவது அந்த படத்தில் நடித்ததன் மூலம் பல கஷ்டங்கள் பட்டுவிட்டதாகவும் சிந்து சமவெளி படம் வெளிவந்த பின் பல துன்பங்களை சந்தித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் எனது குடும்பம் அடைந்த மனவேதனையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது என்றும் சொல்லி உள்ளார்.
என்னை விட என் அப்பாதான் மிகவும் வருத்தப்பட்டதாகவும் மைனா படத்தின் ப்ரோமோஷன் விழாவிற்கு கூட போக முடியாமல் தவித்து விட்டதாகவும் சொல்லியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
