VJ Nakshatra Getup in Nayagi Serial
VJ Nakshatra Getup in Nayagi Serial

வல்லவன் சிம்புவுக்கு லேடி கெட்டப் போட்ட மாதிரி இருக்கு என தொகுப்பாளினி நட்சத்திரா வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

VJ Nakshatra Getup in Nayagi Serial : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் நட்சத்திரா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோர் சீரியலின் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.

மேலும் ஆல்பம் வீடியோக்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாயகி சீரியலில் நீளமான பல்லுடன் சோடாபுட்டி அணிந்து ஒல்லியாக நடித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பல்லவன் படத்தில் பல்லனாக வரும் சிம்புவுக்கு லேடி கெட்டப் போட்டது போல இருப்பதாக கலாய்த்து வருகின்றனர்.

செம்ம அழகு.. அம்மாவின் கல்யாண புடவையில் கண்ணாடி முன்பு அமர்ந்து ஷெரின் கொடுத்த போஸ் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

அதேசமயம் அடப்பாவிகளா என்னடா செஞ்சு வச்சு இருக்கீங்க எனவும் சில ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

மேலும் சிலர் நாயகி சீரியலில் நட்சத்திராவின் நடிப்பு அற்புதமாக இருந்ததாக பாராட்டியுள்ளனர்.

நட்சத்திரா வெளியிட்ட மேலும் சில புகைப்படங்கள்