Viswasam & Petta Release Date

Viswasam & Petta Release : ஒரே நாளில் தான் விஸ்வாசம் படமும் பேட்ட விஸ்வாசம் படமும் மோதி கொள்ள இருப்பதாக விஷால் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 4-வது முறையாக கூட்டணி அமைத்து விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிப்பு மட்டும் தான் வெளியாகியுள்ளது.

ஆனால் எந்த தேதியில் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகாமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகரும் தயாரிப்பாளரும் சங்கத் தலைவருமான விஷால் இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

அதாவது, விஷால் பேட்ட படமும் விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு வெளியாவது உறுதி.. இந்த இரண்டு படங்களும் ஜனவரி 10-ம் தேதி வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார்.

இதனால் ஜனவரி 10-ம் தேதி தான் விசுவாசமும் பேட்ட படமும் மோதி கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மோதலில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.