மகளின் பிறந்த நாளுக்கு புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் புகழ்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் பிரபலமானவர் புகழ். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் கைதி, காக்டைல்ஸ் ,சபாபதி ,வீட்ல விசேஷம் ,யானை, அயோத்தி, எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் புகழ் பென்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். தற்போது மகளின் முதல் பிறந்த நாளான இன்று குழந்தைகள் இருக்கும் புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், என் வாழ்வை மாற்றிய பொக்கிஷம் நீ நீ வந்த நாளிலிருந்து எங்கள் வாழ்க்கை வசந்தமாய் மாறியது முதன்முதலாக உன்னை என் கைகளில் ஏந்தியது என்னால் மறக்க முடியாது இனிவரும் காலம் முழுவதும் எங்கள் வாழ்வை கருவறையாக்கி உன்னை சுமக்க போகிறோம் மகளாய் வந்துள்ள மகாராணிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுவது மட்டுமில்லாமல் லைக்ஸ் குவிந்து வருகிறது.