மகன்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் என்ற படங்களை இயக்கிய பிரபலமானவர் விக்னேஷ் சிவன். இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு உயிர் ,உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றன. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது தனது குழந்தைகளுக்கு என்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விக்னேஷ் சிவன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், நான் உங்களுக்கு உயிர் ன்றும் உலக் என்றும் பெயரிட்டபோது நீங்கள் இருவரும் என் உயிராகவும் உலகாகவும் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். கடவுளின் இந்த அனைத்து ஆசீர்வாதங்களுடன் இந்த பிரபஞ்சத்தில் உங்கள் அனைத்து அன்புடனும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் வாழ்க்கையும் என் உலகமும் உன்னை மிகவும் நேசிக்கின்றனர். லவ் யூ டூ மச் என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் குழந்தைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.