இனியா டான்ஸ் போட்டியில் செலக்ட்டாக பாக்யா செழியனுக்கு வார்னிங் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா செழியன் குடித்து வந்ததற்காக காரணத்தை கேட்க நம்ம எல்லாரையும் வழி நடத்திக்கிட்டு இருந்த தாத்தா இப்போ இல்ல, எழிலும் வெளிய போயிட்டான் இந்த குடும்பத்துக்காக இருக்கிற ஒரே ஆம்பள நான் தான் எனக்கு எப்படி பார்த்துக்க போறேன் என்ற டென்ஷன் இருந்தது என்று சொல்ல அப்படின்னா அப்படி ஒரு டென்ஷனே உனக்கு வேணாம் உன் தலை மேல எந்த பாரத்தையும் நாங்க வைக்க மாட்டோம் நீ ஜெனியையும் குழந்தைங்க மட்டும் பார்த்துக்கோ என்று சொல்லிவிட்டு இந்த குடும்பத்தை பார்த்துக்க நானும் பாட்டியோ இருக்கோம் என்று சொல்லி விடுகிறார் இன்னொரு தடவை இது மாதிரி காரணத்தை சொல்லிக்கிட்டு நிக்காத தோலுக்கு மேல வளர்ந்த பையன்னு பார்க்க மாட்டேன் பேசிட்டு இருக்க மாட்டேன் என்று வார்னிங் கொடுக்கிறார்.
மறுபக்கம் இனியா ரிசல்ட் காக வெளியே காத்துக் கொண்டிருக்க அவரது தோழி உள்ளே போகலாம் என்று வலு கட்டாயமாக கூட்டிச் செல்கிறார். எனக்கு ஆசையெல்லாம் இருக்கு ஆனா நம்பிக்கை இல்ல என்று இனியா சொல்ல நீ நல்லா தான் ஆடி இருக்க வா என்று தோழி கூப்பிட்டு செல்கிறார். முதலில் நான்கு பேரை ஜட்ஜஸ் கூப்பிட இனியா என்னோட பேர் இருக்காது என்று வருத்தப்பட்டு வெளியே நடந்து செல்கிறார் அந்த நேரம் பார்த்து இதுவரைக்கும் கூப்பிட்டதெல்லாம் மத்த காலேஜ் ஆனா ஐந்தாவதாக கூப்பிடப்போவது இந்த காலேஜ் நபர் என்று சொல்லுகின்றனர். இனியா என்று பெயரை சொன்னவுடன் இனியா ஒன்றும் புரியாமல் கண்கலங்கி நிற்கிறார். நண்பர்கள் மற்றும் காலேஜில் இருப்பவர்கள் அனைவரும் இனியா இனியா என உற்சாகப்படுத்த அவர் சந்தோஷமாக மேடையில் ஏறி நன்றி சொல்லுகிறார்.
பாக்யா ரெஸ்டாரன்ட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க அங்கு வந்த செல்வி ஊர் கதைகளை பேசிக் கொண்டிருக்க பாக்கியா என்கிட்ட வந்து பேசிட்டு இருக்க உள்ள வேலை பண்ணலையா என்று கேட்க எங்க செப் பண்ண விடுறாரு உள்ள இருக்குறவங்களே அவர் செய்யறது வேடிக்கை பார்த்துகிட்டு தான் நின்னுட்டு இருக்காங்க உதவி கேட்டால் நானே பண்ணிக்கிறேன் என்று சொல்றாரு நீயே வந்து உள்ள பாரு என்று செல்வி கூப்பிட, அதற்குள் அந்த செஃப் வெளியே வந்து ரசமலாய் செய்திருக்கேன் எப்படி இருக்கு என்று டேஸ்ட் பண்ணி பாருங்க என்று சொல்லுகிறார். பாக்கியா டேஸ்ட் பண்ண செல்வி எனக்கும் கொடுக்க என்று கேட்கிறார். செல்வி சூப்பரா இருக்கு சார் என்று சொல்ல நீங்க எதுவுமே சொல்லலையே மேடம் என்று பாக்யாவிடம் கேட்கிறார் நானும் ரசமளாய் செய்வேன். ஆனா நான் செய்றப்போ இல்லாத ஒரு ஃபிளேவர் எக்ஸ்ட்ரா இருக்கு என்று சொல்ல என்ன சேர்த்து இருக்கீங்க என்று கேட்கிறார் ஆனால் அதை மட்டும் கேட்காதீங்க அது என்னோட சீக்ரெட் என்று சொல்லுகிறார்.
அந்த நேரம் பார்த்து பழனிச்சாமி உள்ளே வர இவர் தான் புதுசா அப்பாயிண்ட் பண்ணி இருக்க செஃப் என்று அறிமுகம் செய்து வைக்கிறார். பிறகு செல்வியிடம் நீ போய் ரசமளாய் எடுத்துக் கொண்டு வந்து கொடு டேஸ்ட் பண்ணட்டும் என்று சொல்லுகிறார். பழனிச்சாமி டேஸ்ட் பண்ணி செம சூப்பரா இருக்கு மேடம் என்று சொல்ல எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்றாரு எனக்கே வேலை கம்மியாயிடுச்சுன்னா பாருங்களேன் என்று சொல்லுகிறார். எல்லா வேலைக்கு வந்த புதுசுல அப்படி தான் இருப்பாங்க இருந்தாலும் ஒரு கண்ணு வச்சுக்கோங்க என்று அட்வைஸ் கொடுக்கிறார்.
பிறகு இனியா வீட்டில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க இனியா எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறார். இனிய இந்த வீட்டில் டான்ஸ் விசயத்தை சொல்ல குடும்பத்தில் இருப்பவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? பாக்கியா, ஈஸ்வரி இருக்கப் போகும் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.