Vishnu Vishal Wishes to Rana

நடிகர் ராணா பின் திருமணத்திற்கு வித்தியாசமாக வாழ்த்து கூறியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

Vishnu Vishal Wishes to Rana : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா டகுபதி. இவர் கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதி நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

இவருடைய திருமணத்தில் நாக சைதன்யா, சமந்தா, தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#45YearsofRajinism.. தல அஜித் செய்த அதிரடி செயல்.. அசந்து போன ரஜினிகாந்த் – தீயாக பரவும் தகவல்

திரையுலக பிரபலங்கள் பலரும் ராணாவின் திருமணத்திற்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இப்படியான நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் வித்தியாசமாக தன்னுடைய வாழ்த்தை கூறியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு யாரோ ஒருத்தர் என் வாழ்க்கையில் கல்யாணமே கிடையாது என கூறினார். தற்போது இந்த போட்டோக்களை பார்க்கும்போது அந்த நபர் மாதிரியே தெரிகிறது என கூறி ராணாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்கு நடிகர் ராணா அது தான் சில வருடங்கள் ஆகிவிட்டது என பதிவிட்டுள்ளார். விஷ்ணு விஷாலின் வாழ்த்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.