விஜயாவின் முகத்தில் கரியை பூசி உள்ளார் முத்து.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து எல்லாருக்கும் போன் போட்டு கீழே வர சொல்ல என்ற ஒரு ஹாலில் ஒன்று கூட அண்ணாமலை முத்து உன்னையும் வர சொன்னானா என்று கேட்கிறார். விஜயா எதுக்கு இப்ப எல்லாரையும் கீழே வர சொல்லி இருக்கான் என்று கேட்க அண்ணாமலை தெரியல முத்து வர சொல்லியிருந்தால் ஏதாவது விஷயம் இருக்கும் என சொல்கிறார்.
அதன் பிறகு எல்லோரும் வீட்டிலே வர முத்து கேட்டை பிடித்துக் கொண்டு ஸ்டைலாக நின்று கொண்டிருக்க விஜயா இவன் போஸ் கொடுக்கிறத பார்க்க தான் வர சொன்னானா என்று கேட்கிறார். எல்லோரும் எதுக்குடா கீழ வர சொன்ன என்று முத்துவை கேள்வி கேட்க முத்து கதவை திறந்து வண்டியை ஓபன் செய்து சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.
அண்ணாமலை புது வண்டியா? யாருடையது? எதற்கு? என்ன கேட்க நம்முடையதுதான் பா இனிமே இதெல்லாம் மீனாவோட பூக்கடை நடமாடும் பூக்கடை. இனி யாரும் இந்த வண்டியை தூக்கிட்டு போக முடியாது. இங்க ஒரு பாக்ஸ ஃபிட் பண்ணிடுவோம் மீனா அதுல பூ வெச்சு எங்க வேணாலும் கொண்டு போய் இருக்கலாம் என்று சொல்ல இதுவும் நல்லா ஐடியா தான் என்று அண்ணாமலை பாராட்டுகிறார்.
மீனா எதுக்கு தேவையில்லாத செலவு என்று கேட்க மீனா சின்ன வயசுல இருந்து ஓடி ஓடி உழைச்சவன் அவளால சும்மா உட்கார முடியாது. அவர் பூக்கடை போனதுக்கு ரொம்ப கவலைப்பட்டா அதனாலதான் இப்படி ஒரு ஏற்பாடு என்று சொல்ல மீனா சந்தோஷப்படுகிறார். எல்லாரும் செய்கிற வேலையை விட நீ செய்யற வேலை ஒசத்தி என்று பாராட்டுகிறார்.
பிறகு மீனாவை ஒரு ரவுண்டு போக சொல்லி முத்து வண்டி ஓட்ட தெரியுமா என்று கேட்க பின்னாடி உட்காருங்க அப்ப தெரியும் என்று முத்துவை உட்கார வைத்து ஓட்டி செல்கிறார். மனோஜ் ரூமுக்கு வந்து ரோகிணியிடம் மீனா முத்துவுக்காக கார் வாங்கி கொடுத்தா முத்து மீனாவுக்காக பைக் வாங்கி கொடுத்து இருக்கான். ரவி ரெஸ்டாரன்ட் வைக்க போறான். அவங்க மாமனார் வீட்ல உடனே வச்சு கொடுக்க கூட ரெடியா இருக்காங்க ஆனா எனக்கு தான் சப்போர்ட் பண்ண யாரும் இல்ல என்று பேசுகிறார்.
முயற்சி பண்ண நல்ல வேலை கிடைக்கும் என்று ரோகினி சொல்ல மன வச்சு எனக்கு பிசினஸ் தான் சரியா வரும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கு ஆனா பணம் தான் இல்ல உங்க அப்பா எப்ப வெளிய வருவாரு என்று கேட்க அப்போ உனக்கு என்னை விட உங்க அப்பாவோட பணம் தான் முக்கியமா என்று ரோகிணி கேள்வி கேட்க நான் அப்படி சொல்லல, உன்ன முதல் முறை பார்த்ததுமே எனக்கு பிடித்திருந்தது என சொல்கிறார்.
ரோகிணி உன்னுடைய 27 லட்சம் பணத்தை எடுத்துட்டு போனேன் அந்த பொண்ணு தேடி கண்டுபிடிச்சு அவகிட்ட இருந்து பணத்தை திரும்ப வாங்கணும் என்று சொல்ல மனோஜ் அது எப்படி முடியும் என கேட்க அவள் எப்படியும் ஏதாவது ஒரு ஏஜென்சி மூலமாகத்தான் போய் இருக்கா. அங்க போய் விசாரிச்சா கனடாவில் அவ இருக்கிற அட்ரஸ் பத்தி தெரியும். இங்க இருந்தே கனடா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து அவளை பிடிக்கலாம் என்று ஐடியா கொடுக்கிறார்.
அடுத்து அம்மா வீட்டிற்கு வண்டியில் வந்து முத்து வாங்கி கொடுத்தது என்று சொல்ல எல்லோரையும் சந்தோஷப்படுகின்றனர். சத்யா வழக்கம் போல இது ஒரு பெரிய விஷயமா அக்கா சம்பாதித்து தருவானு வாங்கி கொடுத்திருப்பாரு என்று பேச மீனா அவர் பணத்துக்கு ஆசைப்படுவது கிடையாது என பதிலடி கொடுக்கிறார். மீனாவின் அம்மா ஊர்ல இருக்காங்க உன் மேல தான் இருக்கு என சுத்தி போடுகிறார். மாப்ள திடீர் திடீர்னு யாரையாவது புடிச்சு அடிச்சாலும் அண்ணே நல்லபடியா பார்த்துக்கிறாரு, உன் வாழ்க்கையில் வைத்து பயந்துட்டே இருந்தேன் என்று சொல்கிறார்.
அடுத்ததாக மனோஜ் மற்றும் ரோகினி என இருவரும் பாஸ்போர்ட் ஏஜென்சிக்கு வந்து அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்கின்றனர். மனோஜ் அந்த பொண்ணோட போட்டோவை எடுத்துக்காட்ட இவ்வளவு நாளா நீ அந்த பொண்ணு போட்டோவ போன்ல தான் வச்சுட்டு இருந்தியா என்று ரோகினி கோபப்பட்டு போனை பிடுங்கி பார்க்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.