Thala Ajith Wishes to Rajinikanth
Thala Ajith Wishes to Rajinikanth

ரஜினிகாந்த் திரையுலகில் 45 வருடம் ஆகிவிட்ட நிலையில் அஜித் செய்த செயல் சூப்பர் ஸ்டாரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Thala Ajith Wishes to Rajinikanth : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆனார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 45 வருடங்கள் நிறைவடைந்து விட்டன.

இதனைக் கொண்டாடும் விதமாக திரையுலகப் பிரபலங்கள் 45 வருட ரஜினியிசம் என காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டனர். ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களும் இந்த அழகிய தருணத்தை கொண்டாடி வருகின்றனர்.

திரையுலக பிரபலங்கள் ரஜினிக்கு சமூக வலைதளப் பக்கங்களில் மூலமாக தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் தல அஜித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வலிமை Vs அண்ணாத்த : அஜித்தின் மரண மாஸ் பிளான் இது தான் – லீக்கான ரகசியம்.!!

அதுமட்டுமல்லாமல் ரஜினியின் உடல்நலத்தை விசாரித்த அஜித இந்த லாக் டவுன் எல்லாம் எப்படி செல்கிறது என எதார்த்தமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தன்னுடைய நண்பரான சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படம் பற்றி கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கு மேல் பேசியதாகவும் பரவி வரும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. அஜித் தொலைபேசி வாயிலாக ரஜினிக்கு வாழ்த்து கூறி இருக்க வாய்ப்புள்ளதாகவே ரசிகர்கள் கூறி வருகின்றனர். காரணம் சூப்பர் ஸ்டார் மீது அன்பும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர் அஜித் என்பது அனைவரும் அறிந்ததே.