விஜய் வர்மாவை தொடர்ந்து மேலும் ஒரு போட்டியாளர் மிட் வீக் எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டுள்ளார்.
Vishnu Vijay Eliminated From BB House : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. வரும் ஞாயிறு அன்று கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அர்ச்சனா, தினேஷ், மணிசந்திரா, மாயா, விஜய் வர்மா, விஷ்ணு ஆகியோர் பைனல் லிஸ்டில் இடம் பெற்று இருந்த நிலையில் நேற்று நடந்த மிட் வீக் எலிமினேஷனில் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து இன்று மீண்டும் ஒரு மிட் வீக் எலிமினேஷன் நடைபெற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் டிக்கெட் டூ பினாலே டிக்கெட்டை வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகியிருந்த விஷ்ணு வெளியேறியதாக சொல்லப்படுகிறது.
தற்போதைய இறுதிப்போட்டியில் அர்ச்சனா, தினேஷ், மாயா மற்றும் மணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.