திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஷால், சாய் தன்ஷிகா காதல் ஜோடி..!
திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் விஷால் நடிகர் சங்கம் கட்டிடம் திறப்பு விழா முடிந்தவுடன் திருமண தேதியை வெளியிடப் போவதாக தகவலை சொல்லி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று நடிகை சாய் தன்ஷிகா நடிப்பில் உருவான “யோகிடா” படத்தில் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொள்ளப் போவதாகவும் அப்போது தனது காதல் குறித்தும் திருமண தேதி குறித்தும் அப்டேட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல் நேற்று மாலை நடந்த விழாவில் தனது காதலி சாய் தன்ஷிகாவை அறிமுகப்படுத்திய விஷால் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி திருமணம் நடக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.
இதனால் ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
