Pushpa 2

மைலாப்பூரில் மாஸ்க் அணிந்து விஷால் சைக்கிள் பயணம்: ஏன் தெரியுமா?

சைக்கிள் பயணமாக கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்தார் விஷால். இது பற்றிய விவரம் பார்ப்போம்..

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் 12 வருடங்களுக்கு பின் ரிலீஸாகி வரவேற்பு கிடைத்திருப்பது, மற்ற பல படங்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக, கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், விஷால் திடீரென சைக்கிளில் மாஸ்க் அணிந்துகொண்டு சென்னை கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்தார். கபாலீஸ்வரர் கோவிலில் எனக்கு ஒரு வேண்டுதல் இருந்தது, 12 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மதகஜராஜா’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சாமிகிட்ட நான் ஒரு வேண்டுதல் வைத்திருந்தேன். அது நிறைவேறி விட்டது. நானே எதிர்பார்க்கவில்லை.

என்னுடைய வேண்டுதல் நிறைவேறி விட்டது. அதை நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறேன். அதற்காகத்தான் வந்தேன்.

சைக்கிளில் வந்தால், டிராப்பிக்கில் நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, சின்ன தெருவாக இருந்தாலும் வந்துவிடலாம் என்பதற்காக சைக்கிளில் வந்தேன்’ என்றார்.

மேலும் விஷால் தெரிவிக்கையில், ‘ஒரு கோடியில் இருந்து நான்கு கோடி வரை பணம் வைத்திருப்பவர்கள் தயவுசெய்து திரைப்படத்தை எடுப்பதற்காக சினிமாவிற்கு வரவேண்டாம். ஏனென்றால், சினிமா மிகவும் மோசமான சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கிறது.

இதை நான் சொன்னபோது அனைவரும் என்னை வில்லனாக பார்த்தார்கள். ஆனால், நான் சொல்வதுதான் உண்மை. தயவுசெய்து அந்த பணத்தை வைத்துக்கொண்டு படம் எடுக்க வேண்டாம். அந்த பணத்தை நிலத்தில் முதலீடு செய்யுங்கள், இல்லை என்றால் உங்கள் குழந்தைகளுக்காக பிக்சட் டெபாசிட் போட்டு வையுங்கள். இதை யாரும் சொல்ல மாட்டார்கள் நான் உங்களுக்கு சொல்கிறேன். தயவுசெய்து நல்ல பாதையில் செல்லுங்கள்’ என்றார்.