ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், விஷால் நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் அப்டேட்ஸ்..

Web Ads

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ வெற்றி பெற்றதை தொடர்ந்து, ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ‘மகுடம்’ என தலைப்பிட்டுள்ளனர்.

ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தினை ஆர்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் சண்டைக்காட்சி ஒன்றினை படமாக்கி வருகிறார்கள்.

இப்படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி, தம்பி ராமையா, அர்ஜெய் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பினை முடிக்க படக்குழு பணிபுரிந்து வருகிறது. தற்போது இப்படத்தின் அறிமுக வீடியோவுடன் ‘மகுடம்’ என்ற தலைப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 99-வது படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து 100-வது படத்தை இயக்குவர் யார், நடிகர யார் என்பதும் கோலிவுட்டில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

vishal and ravi joins in the makutam movie
vishal and ravi joins in the makutam movie