மீண்டும் என்ட்ரி கொடுத்து கரிகாலனை போட்டு படாத பாடு படுத்தி உள்ளார் மாமியார் விசாலாட்சி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் நடித்து வரும் சத்திய பிரியா, மாரிமுத்து, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா என பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை எல்லோரும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
சீரியல் கதைக்களம் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி ரசிகர்களை பக்காவாக என்டர்டெயின்மென்ட் செய்து வருகிறது. மேலும் கடந்த சில வாரங்களாக விசாலாட்சியாக நடித்து வரும் சக்தி பிரியா இந்த சீரியலில் இடம் பெறாமல் இருந்து வந்தார்.
அவர் காசிக்கு போனது போல காட்டி வந்த நிலையில் தற்போது மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் கரிகாலனாக நடித்து வரும் விமலுடன் சேர்ந்து அவரை படாத பாடு படுத்துவது போல ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த வீடியோ