பழனியின் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாக கத்தியை காட்டி கோபியை ஓட விட்டுள்ளார் பாக்கியா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பழனிச்சாமி டீ சர்ட்டில் வந்து நிற்க அதை பார்த்து அவரது அம்மா யாருப்பா நீ என்று கேட்க பழனி நான்தாம்மா அடையாளம் தெரியலையா என்று கேட்கிறார்.
பழனியின் அக்கா உனக்கு அஞ்சு வயசு குறைந்த மாதிரி இருக்கு என்று பாராட்ட அவருடைய அம்மா உங்க அப்பா நேத்து நைட்டு கனவுல வந்தாரு சீக்கிரமா உனக்கு கல்யாணம் நடக்கும்னு சொன்னாரு அவர் சொன்னா மாதிரியே நடக்க போகுது என்று சந்தோஷப்படுகிறார்.
அதன் பிறகு பழனி பாக்யாவை பார்க்க கிளம்பி வருகிறார். ரெஸ்டாரண்டில் ஆர்டர் கொடுத்தவர் எவ்வளவு நேரம் வெயிட் பண்றது என சத்தம் போட்டு கொண்டு இருக்க பாக்கியா அவருக்கு பாதி பணத்தை திருப்பி கொடுத்து கூடவே கூல் ரிங்க்கையும் செய்யும் கொடுத்து கூல் செய்கிறார்.
அடுத்ததாக பழனிச்சாமி கடைக்கு வர செல்வி அமிர்தா ஆகியோர் அவருடைய காஸ்டூமை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். செல்வி என்னன்னு 10, 15 வயசு குறைந்த மாதிரி இருக்க என்று சொல்கிறார்.
அக்கா உள்ள தான் இருக்கு போய் பாரு என்று அனுப்பி வைக்க கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டுக் கொண்டேன் பழனிச்சாமி உள்ளே வர பாக்கியா அவரை பெருசாக கண்டுகொள்ளாமல் வேலையில் பிஸியாக இருக்கிறார். பழனிச்சாமியின் டிரஸ்ஸை பார்த்து ஏதாவது ஏதாவது சொல்லுவாங்க என்று ஆவலோடு இருக்க பாக்கியா பதில் எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.
பழனிச்சாமிக்கு கூல் ட்ரிங்ஸ் கொண்டு வந்து கொடுத்து எப்படி இருக்கு என்று கேட்கிறார். நீங்க வாங்கி கொடுத்த புக்கால ஒரு ஐடியா கிடைச்சுச்சு காலையில ஏற்பட்ட பிரச்சனையை சால்வ் பண்ணிட்டேன் என்று ரெஸ்டாரன்ட் பற்றிய பேசிக் கொண்டிருக்க பழனி சரி கிளம்புறேன் மேடம் என்று சொல்லி கலந்த ஒரு நிமிஷம் என்று கூப்பிட திரும்பவும் பழனிச்சாமி போல எதையாவது சொல்லுவாங்க என்ற எதிர்பார்ப்பு அதிகமாக அம்மாவுக்கு நாட்டுக்கோழி குழம்பு வச்சு தரணும் சொல்லி இருந்தா அடுத்த வாரம் கொண்டு வரேன்னு சொல்லுங்க என்று சொல்லி அனுப்புகிறார்.
இதனால் பழனிச்சாமி காரில் ராஜதந்திரங்கள் எல்லாம் வீணா போச்சே என்பது போல புலம்பிக் கொண்டு செல்கிறார். ஒரு வார்த்தையாவது இத பத்தி சொல்லியிருக்கலாம் என்று தவிக்கிறார்.
அதன் பிறகு ரெஸ்டாரண்டில் தங்கச்சி கர்ப்பமாய் இருக்கிறதால ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம் என்று பாக்கியம் லீவு கேட்க அவரும் லீவ் கொடுக்க பிறகு ராதிகாவின் கர்ப்பம் குறித்து யோசிக்கிறார். இந்த நேரத்தில் பழனிச்சாமி சாருடைய டிரஸ் பாத்தியா என்று கேள்வி மேல் கேள்வி கேட்க யார் என்னை மன நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியாமல் எதையாவது பேசிட்டு இருக்காத என்று திட்டி விடுகிறார். அமிர்தா அம்மாவுக்கு பழனிச்சாமி சார் ஒரு நல்ல பிரண்டு அவ்வளவுதான் என்று சொல்லிச் சொல்கிறார்.
பிறகு பாக்யா கிச்சனில் இருக்கும் போது கோபி தனது கிளவுட் கிச்சன் பிசினஸ் பற்றி போனில் பேசுவது போல பேசி வெறுப்பேற்ற பாக்கியா அவரைப் பார்த்து முறைத்தவாறு இருக்கிறார். இங்க வச்ச பாதாம் பிஸ்தா என்னன்னு தெரியல என்று தேட பாக்யா கத்தியை காட்டி ஓட விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.