சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் செயல்களை எல்லாம் ஓப்பனாக பேசியுள்ளார் நடிகை தமன்னா.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழில் கடைசியாக நடிகர் விஷாலுடன் இணைந்து ஆக்சன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில் தமன்னாவிற்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விட்டது. அதனால் தமிழில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட தமன்னா ஹிந்தி, தெலுங்கு என தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சினிமா துறையில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான செயல்கள் - ஓபனாக பேசி அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை தமன்னா.

இதற்கிடையில் தற்போது எடுக்கப்பட்ட பேட்டியில் கலந்து கொண்ட தமன்னா சினிமா துறையில் நடக்கும் பெண்களுக்கு எதிரான செயல்கள் குறித்து ஓப்பனாக பேசியிருக்கிறார். அதாவது இந்த சினிமா துறையில் யாரும் பெண்களை சீரியஸாய் எடுத்துக்கொள்வதில்லை. நான் பணியாற்றும் படங்களில் ஏதாவது கருத்து கூறினால், அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

சினிமா துறையில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான செயல்கள் - ஓபனாக பேசி அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை தமன்னா.

மேலும் அது சரியா என இன்னொரு முறை என்னையே யோசிக்க வைத்து விடுகிறார்கள். பெண்களுக்கு சினிமாத்துறையில் மதிப்பு இருப்பதில்லை என கூறியுள்ளார். ஒரு காலத்தில் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தேன். ஆனால் தற்போது தனக்கு பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வருகிறது. அப்போது விட இப்போது நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என கூறியுள்ளார்.

சினிமா துறையில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான செயல்கள் - ஓபனாக பேசி அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை தமன்னா.

மேலும் ஹீரோக்களுக்கு சம்பளம் அதிகமாக கொடுக்கிறார்கள். ஆனால் ஹீரோயின்களுக்கு அந்த அளவிற்கு சம்பளம் கொடுப்பது இல்லை. மேலும் தயாரிப்பாளரிடம் இருந்து சம்பளத்தை கூட வாங்கி விடலாம். ஆனால் அங்கீகாரம் மட்டும் அவ்வளவு எளிதில் வாங்க முடியாது. ஒரு ஹீரோ, அவர்கள் நடித்த பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றால் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

சினிமா துறையில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான செயல்கள் - ஓபனாக பேசி அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை தமன்னா.

ஆனால் கதாநாயகி மட்டும் பட புரமோஷனில் கலந்து கொள்ளவில்லை என்றால், எனக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சினை என செய்தி வரும் எனக் கூறினார். தற்போது இரண்டு பான் இந்தியா படங்களில் நடித்தும், அந்த போஸ்டரில் என்னுடைய புகைப்படம் இதுவரை இடம்பெறவில்லை எனவும் தமன்னா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இவர் இவ்வாறு ஓப்பனாக பேசியுள்ள இந்த தகவல் சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி ரசிகர்களிடையே வைரலாகியும் வருகிறது.