வலிமை படத்துக்கான கதையை அஜித்துக்காக எழுதவில்லை என வினோத் பேட்டியில் கூறியுள்ளார்.

Vinoth Reveals Secret About Valimai : தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று சதுரங்க வேட்டை உள்ளிட்ட தரமான படங்களை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் வினோத். இந்த படத்தை தொடர்ந்து அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு மீண்டும் அஜித்தை வைத்து வலிமை என்ற படத்தை இயக்கியுள்ளார்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்தப் படம் பற்றி வினோத் ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது வலிமை படத்தின் கதை அஜித்துக்காக எழுதப்பட்டது அல்ல. அவர் நடிக்கிறார் என்பது உறுதியான பிறகு தான் படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்தோம். அஜித் கமிட் ஆன பிறகுதான் அவருடைய கதாபாத்திரத்தை போலீஸ் கதாபாத்திரமாக மாற்றினோம் என தெரிவித்துள்ளார்.

எதுக்குடா என்ன கூட்டிட்டு வந்திங்க.., Dindigul I Leoni செம Comedy – குலுங்கி சிரித்த அரங்கம்..! | HD

சிஸ்கே அணியில், மீண்டும் தமிழக வீரர் அஸ்வின் ஆட்டம்?

இவர் அளித்துள்ள இந்த பேட்டி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அதே சமயம் அவர் இந்த படத்தின் கதையை யாருக்காக எழுதினார் என்பதை சொல்லவில்லை.