ஓடிடி.யில் வீர தீர சூரன், எம்புரான் படங்கள் வெளியீடு

Web Ads

விக்ரம் மற்றும் மோகன்லால் நடித்த திரைப்படங்கள் ஓடிடி.யில் வெளியாகிறது.

அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

ரூ.50 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் உலக அளவில் ரூ.80 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.

Web Ad 2

லென்த் ஷாட்ஸ் மூலம் பழி தீர்க்கும் படலமாக உருவான இப்படம் இரண்டாம் பாகம் தான். படத்தின் வரவேற்பை பொறுத்து முதல் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்தப் படம் நாளை ஏப்ரல் 24-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

படத்தை தமிழ் தவிர்த்து இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் காண முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படமும் வெளியாகிறது.