Vikram 58 Team Denies Rumors : Chiyaan Vikram | Anurag Kashyap | Kollywood | Tamil Cinema | Latest Cinema News | Vikram 58

Vikram 58 Team Denies Rumors :

இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்த பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்தான் இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கமல் தயாரிப்பில அவரோட உதவியாளர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் கடாரம் கொண்டான் படத்தின் படப்பிடிப்பு முடிஞ்சு பின் தயாரிப்பு வேலைகள்ல பிஸியா இருக்கு.

மேலும் எல்லா வேலைகளும் முடிஞ்சு மே 31-ம் தேதி இந்த படம் வெளியாகும்னும் எதிர்பார்க்கப்பட்டுச்சு.

இயக்குநர் அவதாரம் எடுக்கிறாரா சூர்யா? அவரே சொன்ன தகவல் இதோ!

ஆனா சில காரணங்களால இப்ப இந்த படம் ஜூன் 14-ம் தேதிக்கு தள்ளிபோய் இருக்கிறதா தகவல் வெளியாகியிருக்கு. இது ஒருபக்கம் இருக்க விக்ரமின் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.

அடுத்ததாக அவர் அஜய் ஞானமுத்து படத்தில் நடிக்க உள்ளாராம். இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கும் என சொல்லப்பட்டுள்ளது.

மேலும் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்த பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்தான் இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.