இறுதி கட்டத்தை நெருங்கிய தங்கமகள் சீரியல்.. கதாநாயகி வெளியிட்ட பதிவு..!

Web Ads

விஜய் டிவியில் தங்கமகள் சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

vijaytv thangamagal serial wrapped
vijaytv thangamagal serial wrapped

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றன. நேற்று பாக்கியலட்சுமி சீரியலில் இறுதியாக தத்துவத்துடன் நிறைவு பெற்றது.

அதனைத் தொடர்ந்து மதிய நேரத்தில் ஒளிபரப்பான தங்கமகள் சீரியல் முடிவுக்கு வரவுள்ளது. இந்த சீரியல் நாளை ஐந்து மணிக்கு திருமண வைபவமாக ஒளிபரப்பாக உள்ளது.

இத்துடன் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது இதனை உறுதிப்படுத்தும் விதமாக சீரியல் கதாநாயகி அஸ்வினி புகைப்படங்களை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

அதில் ஷூட்டிங் முடிந்ததாக கேக் வெட்டியும் அனைவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் என அனைத்தையும் வெளியிட்டு உள்ளார். ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியல் முடிந்ததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்த நிலையில் தற்போது இந்த சீரியலும் முடிவுக்கு வரப்போவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ashwini S (@ashwini_aanandita)