28 ஆண்டுகளுக்கு பிறகு, கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தி ரீஎன்ரி..

Web Ads

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன், அருள்நிதி நடித்த ‘டைரி’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் இன்னாசி பாண்டியன் உடன் மீண்டும் இணைந்து ராகவா லாரன்ஸ், அவருடைய சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் ‘புல்லட்’ படத்தை தயாரித்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

‘புல்லட்’ படத்தின் தமிழ் டீசரை விஷால், எஸ்.ஜே.சூர்யா, பிருத்விராஜ் மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் வெளியிட்டனர், தெலுங்கு டீசரை நாக சைதன்யா வெளியிட்டார். படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வகையில் டீசர் உருவாகியுள்ளதாக படக்குழுவினரை அவர்கள் பாராட்டினர்.

இப்படத்தில் 1980 மற்றும் 90-களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக விளங்கிய டிஸ்கோ சாந்தி மீண்டும் தடம் பதிக்கிறார். கடந்த 1997-ம் ஆண்டு முதல் படங்களில் இவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகையாக அன்று கலக்கிய டிஸ்கோ சாந்தி, இந்தப் படத்தின் மூலம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படம் பற்றிப் பேசிய இன்னாசி பாண்டியன், ‘இது முழு நீள அமானுஷ்ய ஆக்சன் த்ரில்லர் படம். இந்த கதையை முதல் படமாக இயக்க இருந்தேன். சில காரணங்களால் அது இயலவில்லை. இதை எனது 2-வது படமாக இயக்கி வருகிறேன்’ என்றார். படத்தில் டிஸ்கோ சாந்தியின் கவர்ச்சிக்கு வழியில்லை. ஆனால், மிரட்டலான நடிப்புக்கு வழியிருக்கிறது என தெரிகிறது.

actress disco shanti returns to act in silver screen after 28 years
actress disco shanti returns to act in silver screen after 28 years