‘படை தலைவன்’ படத்தில், சிறப்புத் தோற்றத்தில் வருகிறார் விஜயகாந்த்..
நடிகர் சண்முகப் பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் ‘ படை தலைவன்’ படத்தில் விஜயகாந்த் மாஸாக வந்து கலக்குகிறார். இது குறித்த தொழில்நுட்ப விவரம் வருமாறு:
விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் படம், ‘படை தலைவன்’. அன்பு இயக்கும் இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதில், விஜயகாந்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் சிறப்புத் தோற்றத்தில் காண்பித்துள்ளனர்.
இதுகுறித்து, இயக்குநர் அன்பு கூறும்போது, ‘இந்தப் படத்தில் விஜயகாந்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் சிறப்புத் தோற்றத்தில் காண்பிக்கிறோம். அவர் கேரக்டர் கண்டிப்பாக ரசிகர்களைக் கவரும். விஜயகாந்த் நடித்த ‘பொன்மனச் செல்வன்’ படத்தில் இடம் பெற்ற ‘நீ பொட்டு வச்ச தங்கக்குடம்’ பாடலையும் இணைத்துள்ளோம்.
விஜயகாந்துக்கும் சண்முகப் பாண்டியனுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்தும் விதமாக, இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது’’ என்றார்.
முன்னதாக, விஜய் நடித்த ‘த கோட்’ படத்திலும் ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலமாக விஜயகாந்தை காண்பித்திருந்தனர்.
இனி, வருங்காலங்களில் ‘எம்ஜிஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த திரைப்படம் ரிலீஸ்’ என விளம்பரம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில், ஏ.ஜ.தொழில்நுட்ப வளர்ச்சி அப்படி.!