
ரித்திக் ரோஷன் மீது காதல் இருப்பதாகவும் ஏ ஆர் ரஹ்மானை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் ஆசையை வெளிப்படுத்தி உள்ளார் டிடி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக தொகுப்பாளியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
தனது பள்ளி பருவ நண்பரை காதலித்து திருமணம் செய்து ஒரு சில மாதங்களில் அவரை விவாகரத்து செய்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார். இப்படியான நிலையில் படங்களிலும் நடித்து வரும் டிடி அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள மத்தகன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
ஆகஸ்ட் 18ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் டிடி கலந்து கொண்டார். அப்போது அவர் தனக்கு ரித்திக் ரோஷனை ரொம்ப பிடிக்கும் என தெரிவித்தார்.
மேலும் அடுத்த ஜென்மத்தில் ஏ ஆர் ரஹ்மானை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். டிடி இவ்வாறு பேசிய விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
