Vijay and Lokesh
என் கற்பனையை நிஜமாக்கிடீங்க என விஜய்க்கும் லோகேஷுக்கும் நன்றி கூறியுள்ளார் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி.

தமிழ் சினிமாவில் 80 வயது நடிகரான ஷாருஹாசனை ஹீரோவாக வைத்து தாதா 87 படத்தை இயக்கி வெற்றி கண்டவர் விஜய் ஸ்ரீ ஜி. இந்த படத்தில் ஒரு நடிகை திருநங்கையாக துணிந்து நடித்திருந்தது பாராட்டப்பட்டது.

இவர் இறுதியாக சென்ற விஜயின் பிறந்த நாளுக்கு விஜய் மீசை இல்லாதது போல போட்டோ ஒன்றை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறி இருந்தார்.

தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் முறையாக மீசை இல்லாமல் நடித்திருப்பதாக பிரபல நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனை பார்த்த விஜய் ஸ்ரீ என்னுடைய கற்பனையை நிஜமாக்கியதற்கு நன்றி என விஜய்க்கும் லோகேஷ் கனகராஜிற்கும் டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.