மாணவர்கள் சந்திப்பில் அசுரன் பட டயலாக்கை எடுத்துக்காட்டாக கூறி மாணவர்களை ஊக்கவித்த விஜயின் வீடியோ வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோக்களின் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் விஜய் வரும் சட்டமன்றத் தேர்தலில் மூலம் அரசியலில் களம் இறங்க இருப்பதாக பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கேற்றார் போல் விஜய்யும் அரசியல் சார்ந்த பல நல்ல விஷயங்களை மக்களுக்கு தனது இயக்கம் மூலம் செய்து வருகிறார்.

அந்த வகையில் இன்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 6000 மாணவர்களை நேரில் சந்தித்து பரிசு வழங்கி ஊக்குவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி சென்னை நீலாங்கரை பகுதியில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சியின் மேடையில் பேசும் விஜயின் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி இந்நிகழ்ச்சியில் தனுஷின் அசுரன் திரைப்படத்தின் சூப்பர் ஹிட் வசனமான ‘காடு இருந்தா எடுத்துக்குவானுங்க, காசு இருந்தா புடுங்கிக்குவானுங்க ஆனா படிப்ப மட்டும் உன் கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது’ என்ற வசனத்தை பேசி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அறிவுரை கூறியுள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.