விஜய் மகன் சஞ்சய் இயக்கும் புதிய படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!
விஜய் மகன் இயக்கும் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகனான ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் என்றும் லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி முதல் கட்ட படபிடிப்பும் நடந்துள்ளது.
தற்போது இந்தப் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது முதற்கட்ட படப்பிடிப்பு மூன்று நாட்கள் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் விரைவில் தொடங்க உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் சமீபத்தில் இந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
