Web Ads

கூலி படத்தின் டீஸர் ரிலீஸ் எப்போது? சூப்பர் தகவல் இதோ.!!

கூலி படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

coolie movie teaser release update

coolie movie teaser release update

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா, சத்தியராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது டீசர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இன்னும் இரண்டு வாரங்களில் கூலி படத்தின் டீசர் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

coolie movie teaser release update

coolie movie teaser release update