பிரபாஸ் நடிக்கும் பிரம்மாண்ட படத்தில் வில்லன் ஆகிறார் விஜய் சேதுபதி?
விஜய் சேதுபதி மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கவுள்ளாரா? என்பது பற்றிக் காண்போம்..
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படத்துக்கு பின்னர் அதிகப்படியான வில்லன் வாய்ப்புகள் வந்ததால், தனது ஹீரோ இமேஜ் பாதித்துவிடும் என்பதை கருத்தில் கொண்டு வில்லனாக நடிக்க வந்த வாய்ப்புகளை தவிர்த்து வந்தார் விஜய் சேதுபதி.
கடந்த ஆண்டு நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் அவருக்கு கம்பேக் படமாக அமைந்து அமோக வரவேற்பை பெற்றது. பின்னர் ‘ஏஸ்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்திலும் பெயரிடப்படாத படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு நித்யா மேனன் ஜோடியாகியுள்ளார்.
இப்படி ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு மீண்டும் வில்லனாக பிரம்மாண்ட படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அதாவது, பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தை அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற மிரட்டலான படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார்.
பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முன்னதாக ‘இனி ஹீரோதான் என் வழி’ என்ற முடிவிலிருந்து மாறுவாரா? இல்லை, கதைக்களம் பிடித்ததால் வில்லனாக நடிக்கிறேன் என தொடர்வாரா? பார்க்கலாம்.!
