Vijay Sethupathi Stand With Suriya
Vijay Sethupathi Stand With Suriya

ஜோதிகாவின் சர்ச்சை பேச்சு குறித்து சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக மாஸ்டர் பட நடிகர் கூறியுள்ளார்.

Vijay Sethupathi Stand With Suriya : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான ஜோதிகா விருது விழா ஒன்றில் தஞ்சை பெரிய கோவில் பற்றி பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் இந்த பேச்சு குறித்த விவாதம் அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில் நடிகர் சூர்யா நாங்கள் அந்த கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறி அறிக்கை விட்டிருந்தார்.

என்னம்மா டிரஸ் இது? அம்மாவின் முன்னாடி டக்கு டக்குனு உடைமாற்றும் சூப்பர் சிங்கர் பிரகதி – வைரலாகும் வீடியோ.!

மேலும் அந்த அறிக்கையில் ஜோதிகா பேச்சில் எந்தவித தவறும் இல்லை. ஊடகங்கள் தான் இதை பெரிதாக்கிக் கொண்டே இருக்கின்றன எனக் கூறினார்.

ஜோதிகாவின் பேச்சுக்கு விஜய் சேதுபதி ஆதரவு தெரிவிப்பதாக பதிவு ஒன்று வைரல் ஆன நிலையில் அது என்னுடையது அல்ல என விஜய் சேதுபதி விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் தற்போது சூர்யாவுக்கு பேச்சுக்கு ஆதரவளிப்பதாக விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

அவருடைய பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.